சேமிப்பு உண்மையில் உங்கள் தேவையைப் நிறைவேற்றுகின்றனவா? பாதுகாப்பு என்ற பெயரில் நீங்கள் இழப்பது என்ன?
சேமிப்பு என்பது வேறு. முதலீடு என்பது வேறு. உங்கள் வளமான வாழ்க்கைக்கு நிதி சார்ந்த இரண்டு முக்கிய கூறுகள். அவை ஒத்ததாகத் தோன்றினாலும், அவை வெவ்வேறு நோக்கங்களை நிறைவேற்றுகின்றன, மற்றும் வெவ்வேறு நிலைகளில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. .
சேமிப்புக்கும் முதலீடு செய்வதற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்பதை நன்கு புரிந்து கொண்டு இரண்டிலும் உள்ள ரிஸ்க் அளவு மற்றும் எந்த அளவு விலைவாசி உயர்வையும் தாண்டி உங்களுக்கு நன்மை பயக்கும் என்பது நீங்கள் சேமிக்கவோ முதலீடு செய்யுமுன்போ அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் ஆகும்.
பொதுவாக வங்கிகளில் சேமிப்புக் கணக்காகவோ அல்லது வைப்புத் தொகையாகவோ சேமிப்பதன் மூலம் நீங்கள் வட்டியுடன் கூடிய வருமானத்தைப் பெறுவீர்கள். ஆனால் எந்த ரிஸ்க் கும் இல்லை. மிக அவசரத் தேவைகளுக்கு அது உங்களுக்கு மிக உதவும்.
ஆனால் ஏறி வரும் விலைவாசியில் வைப்புத் தொகைகளின் முதிர்வு மிக மிக குறைந்த அளவே உங்கள் வாங்கும் திறனுக்கேற்ப உதவுகிறது. அல்லது பல நேரங்களில் விலை உயர்வை விடவே குறைந்த அளவே உங்களுக்கு முதிர்வுத் தொகையாக கிடைக்கிறது.
வங்கி முதிர்வுத்தொகை உண்மையான வருவாய் விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த சேமிப்பு என்பது பல நேரங்களில் பயனற்றதாக்குகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான வருவாய் விகிதம் என்பது பணவீக்கத்தின் விளைவைக் கணக்கிட்ட பிறகு முதலீட்டாளர் ஒரு முதலீட்டில் சம்பாதிக்கும் வருவாய் வீதமாகும்.
பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் பொதுவான விலை அதிகரிப்பு என குறிப்பிடலாம்.
உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் ஒரு லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டி வழங்கும் வங்கியில் டெப்பாசிட் செய்கிறார் .
5 ஆண்டுகள் கழித்து அந்த டெப்பாசிட் 7 % வட்டி விகிதத்தில் கிடைக்கும் வட்டி ரூ 40000 என வைத்துக் கொள்வோம்.
இதே ஆண்டுக் காலத்தில் பழைய ஆண்டுகளில் தரவுப் படி விலைவாசிப்புள்ளி 6% வீதம் உயர்ந்து வருவதாகக் கொண்டால் , டெப்பாசிட் செய்யும்போது ஒரு பொருளை ரூ 1 லட்ச ரூபாய்க்கு நீங்கள் வாங்கினீர்கள் எனில் 5 ஆண்டுகள் கழித்து அதே பொருள் சராசரி விலைவாசி உயர்வின் அடிப்படையில் ரூ 133824 / ஆக இருக்கும். அதாவது 33824 ரூபாய் கூடுதலாகத் தர வேண்டி இருக்கும்.
இப்போது நீங்கள் டெப்பாசிட்டாகப் போட்டு வைத்த தொகையைக் கொண்டு அதே 1 லட்ச ரூபாய் பொருளை ,5 ஆண்டுகள் கழித்து வாங்கும் அந்த விலை உயர்வு ரூ 33824 ஐ நீங்கள் டெப்பாசிட் மூலம் கூடுதலாகப் பெற்ற வட்டி ரூ 40000/ ம் மூலம் ஈடு செய்த பின் பார்த்தால் நீங்கள் உண்மையில் பெற்ற கூடுதல் தொகை வெறும் ரூ 6432/= ( 40000-33824) . ( இதுவே 10% விலை உயர்வாகக் கணக்கிட்டால் ஒரு லட்ச ரூபாய் பொருளின் விலைவாசி உயர்வு ஐந்து ஆண்டுகளில் ரூ 61051, எனில் நீங்கள் பெறும் வட்டி ரூ 40000/- அதை விடக் குறைவு. பாதுகாப்பு மட்டுமே உங்களுக்கு போதுமா? எதிர்காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் எனச் சிந்திக்கும் தருணம் இது.)
அதாவது ஒரு லட்சத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு உண்மையான கூடுதல் தொகை என்பது வெறும் ரூ 6432/= . அதாவது வெறும் 1.28 % வீத வட்டி மட்டுமே உண்மையான கூடுதல் தொகை.
அதுவும் அந்த ரூ 40000/= நீங்கள் 30% வரி கட்டுபவராக இருப்பின் , அந்த வட்டிக்கான வரி ரூ 12000/- கழித்தால் நீங்கள் பெற்ற உண்மையான பயன் ரூ 28000/=. அதாவது 5 ஆண்டுகள் காத்திருந்தும் , ஒரு லட்ச ரூபாய் பொருளுக்கான கூடுதல் விலையான ரூ 33824 /= ஐ வாங்கவே கையிலிருந்து கூடுதலாக ரூ 5824 / தர வேண்டும்.
( 33824-28000) . அப்படி பாதுகாப்பு என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் வங்கியில் சேமிப்பதால் நாம் இழப்பதே அதிகம்.
அது மட்டுமின்றி வங்கிகளில் நீங்கள் போடும் வைப்புத் தொகை பல இடங்களில் முதலீடுகள் ஆகவும்,பலருக்கு கடன்களாகவும் வழங்கப்படுகின்றன. ஆனால் எங்கு முதலீடு செய்யப்படுகிறது? யாருக்கு கடன் வழங்கப் பட்டது? எந்தளவு வராக்கடன்கள், ஏமாற்று (Fraud)வேலைகள் நடந்தன என்ற எந்த விஷயமும் உங்களோடு பகிரப்படுவதில்லை.
அப்படியானால் இதற்கு மாற்று என்ன?
எதிர்காலத்தில் 5 அல்லது 10 ஆண்டுகள் பின் உங்கள் குழந்தைகளின் கல்வி தேவை விலைவாசியை பொறுத்து உயரக்கூடும் அதற்கு இப்போதே திட்டமிடல் அவசியமாகிறது.
உங்கள் மகன் நமது மகளுக்கு திருமணத்திற்கான செலவு 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்து விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு இன்று திட்டமிட வேண்டும்
உங்கள் கனவு வீட்டை பத்து ஆண்டுகள் கழித்து வாங்கும் பொழுது நீங்கள் எண்ணியபடி பெரிய வீடாக வாங்குவதற்கு கையில் ஒரு முதலீடு சேமிப்பாக இருந்திருந்தால் சிறந்த இடத்தில் சிறந்த விலையில் உங்கள் கனவு வீட்டை சொந்தம் ஆக்கிக் கொள்ள முடியும்.
உங்கள் உங்கள் கார் வாங்கும் கனவை 5 அல்லது 10 ஆண்டுகள் திட்டமிட்டு சேமிப்பதன் மூலம் கடன் மூலம் வாங்க முடிந்த காரை விட நீங்களும் குடும்பத்தாரும் விரும்பிய காரை உங்கள் முதலீட்டின் தொகையிலிருந்தே வாங்கலாம்.
ஓய்வுக்காலத்தில் சிறந்த நிம்மதியான ஓய்வுக்கும் மருத்துவ தேவை ஏற்பட்டால் அதையும் சமாளிக்க உங்கள் முதலீடுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க நீங்கள் இன்றே திட்ட மிட வேண்டும்.
உங்கள் முன் மிகப் பாதுகாப்பான வங்கியில் போடும் வைப்புத் தொகை என்பது இதை பூர்த்தி செய்ய முடியாது.
அப்படியானால் மாற்று என்ன?
1. பங்குச் சந்தை முதலீடுகள்.
2. தங்க நகை அல்லது தங்க பத்திரங்கள்
3. கூடுதல் வட்டி தரும் தனியார் நிறுவனங்கள்
4. நீண்ட கால அஞ்சல் அலுவலக பத்திரங்கள்
5. அரசு நிறுவனங்களின் நீண்ட கால பாண்டுகள்.
6. மியூச்சுவல் ஃபண்ட் கள்.
இவற்றின் சாதக பாதகங்களை இப்போது பார்க்கலாம்.
1. பங்குச் சந்தை முதலீடு.
இது மிக மிக அதிக தொகை பெறும் வாய்ப்பு இருந்தாலும் , பல்வேறு பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. எவ்வளவு விஷயம் தெரிந்த நபராக இருந்தாலும் , பல்வேறு வெளிக்காரணிகள் பங்குச் சந்தையை பாதிக்கின்றன என்பதால் முதலையே இழக்கும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே நான் இவற்றை பரிந்துரை செய்வதில்லை.
2. தங்க நகை அல்லது தங்க பத்திரங்கள்
இவை 1971 முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் வெறும் 7.75 சத வீத லாபத்தையே எட்டியுள்ளது. அதாவது சரியான நேரத்தில் முதலீடு செய்தவர்கள் கூடுதல் பயனடைந்தார்கள் என்றாலும் அந்தச் சரியான நேரத்தை அளவிடவோ குறிப்பறிவதோ அதே தங்கம் சார்ந்த தொழிலில் உள்ளவர்களுக்கே கடினம். ஆகவே இதையும் நான் பரிந்துரைக்க வில்லை.
3. கூடுதல் வட்டி தரும் தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனம் எனும்போதே அதனுடன் தொடர்புடைய பாதகமான அம்சமே அதிகம். உதாரணமாக சஹாரா, அதானி , நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்களே இழப்பைச் சந்திக்கும் போது பிற நிறுவனங்களை நம்பி முதலீடு என்பது அதிகம் பாதகமான அமசத்தையே கொண்டுள்ளது.
4. நீண்ட கால அஞ்சல் அலுவலக பத்திரங்கள்.
இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகையானது ஓரளவு விலைவாசி உயர்வுக்கு சமன் செய்யுமளவு இருக்கலாம். ஆனால் உங்கள் முதலீடுகள் நீண்ட கால பத்திரங்களாக இருப்பதால் , இடையில் ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் முதிர்வுக்கு முன் முடிக்க வேண்டுமெனில் குறைந்த வட்டியும் , அதிலும் அபராத வட்டியும் சேர்ந்து உங்கள் சேமிப்பதன் பயனை வெகுவாக குறைத்துவிடும். இடையில் ஏற்படக்கூடிய பல்வேறு எதிர்காலத் தேவைகளின் போது இவை பயனற்றுப் போகின்றன.
5. அரசு நிறுவனங்களின் நீண்ட கால பாண்டுகள்.
இவற்றிலும் மேலே குறிப்பிட்டுள்ள அஞ்சலக சேமிப்புத் திட்டங்களைப் போலவே நீண்ட காலத்திற்கு வைப்புத் தொகையாக மேற்கொள்ளப்படுகிறது
ஆகவே இடையில் தேவை ஏற்படும் நம்மால் உடனே எடுக்க இயலாது.
5. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்.
இது விலை வாசி உயர்வை மீறி அதிக லாபம் அளிக்கிறது.
ஒரு வருடத்திற்குப் பின் அவசரத் தேவை ஏற்படின் திரும்ப பெற்றாலும் EXIT LOAD கிடையாது.
நீண்ட கால தேவைகளுக்கு திட்டமிட்டு சேமிக்க மாதம் குறைந்த பட்ச தொகை ரூ 500 / முதல் முதலீடு செய்யலாம்.
குழந்தைகளின் கல்வி, திருமணம், கனவு வீடுகள், வாகனங்கள் போன்றவற்றிற்கு முன்கூட்டியே தீர்மானித்து மாதாந்திர , வருடாந்திர ,ஒரே மொத்த முதலீடு என நம் வசதிக்கேற்ப சேமிக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டு மூலம் நீங்கள் பெறக்கூடிய லாபம்,நீண்ட கால தேவைகளுக்கான திட்டமிடல் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் முதலீடுகள் எந்த வகையில் பயன்படுத்தப் பட்டு வருகிறது, இடையில் நடைபெறும் பங்குப் பரிவர்த்தனைகள் ( Portfolio Churning)பற்றி உங்களுக்கு ஒவ்வொரு காலாண்டும் பொதுவெளியில் அறிக்கை தரப்பட்டு வெளிப்படையான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இது வங்கிகளில் கிடையாது.
பரிந்துரை: நம்பகமான பாதுகாப்பான முதலீடு என நினைக்கும் எதுவும் உங்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதில்லை . மாறாக நீங்கள் எடுக்கும் ரிஸ்க் அளவைப் பொறுத்து ஓரளவு பாதுகாப்பான முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே என உறுதியாகக் கூறலாம். அது பற்றிய விளக்கமான அடுத்த பதில் விரிவாகப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment