Saturday, August 31, 2024

வெறும் ரூ 500/= சேமிப்பில் உங்கள் குழந்தையை கோடீஸ்வரரின் குழந்தையாக்க முடியுமா?

இந்த அரண்மனை எங்கே உள்ளது என்றும் , அதன் பெயர் என்ன என்றும்  தெரிகிறதா? 


இது செட்டிநாடு கானாடுகாத்தான் அரண்மனை. 


இவ்வளவு பெரிய அரண்மனைய அந்த காலத்திலேயே கட்டுவற்கு அவர்களிடம் செல்வம் எப்படி சேர்ந்தது? 


யாரோ ஒருவருடைய  தலைமுறையில்  அதிர்ஷ்டத்தில், அதிரடியாக அவர்கள் இதற்கான செல்வத்தை சேர்க்கவில்லை. 


பல தலைமுறைகளாகவே சிக்கனமாகவும், சேமிக்கும் பழக்கமும் இருந்த ஒரே காரணத்தினாலேயே அந்த காலத்திலேயே அவர்களால் செல்வம் சேர்க்க முடிந்தது. 


இன்று உங்களிடம் ஒரு கோடி ரூபாய்  அளவு செல்வம் இல்லை என்றால் அதன் ஒரு காரணம் உங்கள் முன்னோர் செல்வம் சேர்க்க முடியாமல் இருந்ததற்கான பல காரணிகள்   இருக்கலாம். 


ஆனால் உங்கள் தலைமுறைகளுக்கும் உங்களுக்கும் ஒரு செல்வ வளம் சேர்க்க உங்கள் முன்னால் வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கின்றன. 


இருந்தும்,  இன்றும் உங்களிடம் குறிப்பிடத்தக்க அளவு செல்வம் சேர்க்க முடியவில்லை என்றால் , முதலில் சொன்ன இரண்டே காரணங்கள் மட்டும். 


1. சிக்கனம் 

2. தொடர்ச்சியான சேமிப்பு  

இரண்டும் இல்லாமற் போவது மட்டுமே.


இன்று உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும், அதற்குப் பின் வரும் பல தலைமுறைகளுக்கும் செல்வம் சேர்க்க உங்களுக்கு இன்று பல்வேறு வகையான வழிமுறைகள் உள்ளன. 


இது ஏதோ உங்கள் ஒரே தலைமுறைக் காலத்திலேயே அதிரடியாக சேர்க்க முடியும் என்ற குறுக்கு வழிகள் நிச்சயம் பலனளிக்காது . நீடித்தும் இருக்காது. 


உதாரணமாக அந்தக் காலத்திலேயே பணம் கொட்டிக் கொடுக்கப்பட்டு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பல நடிகர் நடிகைள் , ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி இறந்ததும் , வாழ்ந்து வருவதும் ஒரு படிப்பினை. 


காரணம் , அதே இரண்டு காரணங்கள் 

சிக்கனம் மற்றும் சேமிப்பு

அதற்காக நீங்கள் மிக அதிகமாக வருமானம் ஈட்ட வேண்டும், தடாலடியாக செல்வ வளத்தைக் சேர்க்க வேண்டும்  என்ற வழிமுறையும் நிலையானது அல்ல. 


உங்களின் காலகட்டத்திலேயே குறைந்தபட்சம் 20 அல்லது 40 வருடங்கள் நீங்கள் சிறு அளவில் சேமித்தால் கூட நீங்கள் கோடீஸ்வரர் ஆக முடியும்.



 உங்கள் குழந்தைகளும் கோடீஸ்வரர்களின் குழந்தைகளாக ஆக முடியும்.


அவர்களுக்கும் இதே போன்ற செல்வத்தை மட்டுமல்ல , சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் நீங்கள் பெறும் செல்வந்தராக முடியும். 


இன்று உங்கள் வருமானம் , செல்வ நிலை எவ்வாறு இருந்தாலும் எப்படி நீங்களும் உங்கள் சந்ததியினரும் செல்வந்தராக வாழ முடியும் ? 


அதற்கான விடை இதோ . 


மிகக் குறைந்த வருமானம் உள்ள ஒருவரால் கூட இதைச் சாதிக்க முடியும். 


உதாரணமாக, மாதம் ரூ 500/= மட்டுமே எப்படியாவது மிச்சப் படுத்தி , ஒரு சிறந்த முதலீட்டு ஆலோசகர் மூலம் ( ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ்) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் SIP கணக்கு துவங்குங்கள். 


இது ஒரு 30 ஆண்டுக்காலம் தொடர்ச்சியாக மாதம் ரூ 500/= வீதம் ஏறக்குறைய 12 சதவீதம் வரக்கூடிய திட்டங்களில் போடுவதாகக் கொண்டால் , 30 ஆண்டுகள் கழித்து நீங்கள் பெறக்கூடிய தொகை ரூ 17.64 லட்சம் . 


இதையே ஒரு சிறு முன்னேற்றத்துடன் , 30 ஆண்டுகளும் வெறும் 500 ரூபாயாகவே தொடராமல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பத்து சதவிகிதம் தொகையை உயர்த்தி சேமிப்பதன் மூலம் இன்னும் கூடுதலாக பெறலாம்.


 அதாவது முதல் ஆண்டில் மாதம் ஒரு 500 என்று எடுத்துக் கொண்டால் இரண்டாவது ஆண்டில் மாதம் 550 மூன்றாவது ஆண்டில் அதன் 10 சதவீத உயர்வு என்று தொடர்ந்து 30 ஆண்டுகள் இந்த சேமிப்பு தொடர்ந்து வந்தோமானால் கிடைக்கக்கூடிய தொகை பல மடங்கு அதிகரிக்க முடியும் . 


இது போல் ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்த்தி முதலீடு செய்வதை  நீங்கள் உங்கள் 30வயதில் தொடங்கினால் ,உங்கள் 60வயதில் பெறக் கூடிய தொகை தோராயமாக 44 லட்சம். 


இதே கணக்கை ,உங்கள் மகன் அல்லது மகள் அடுத்த 10 ஆண்டுகள்,(அதாவது மொத்தம் 40 (30+10))  தொடர்கிறார்கள் என வைத்துக்கொண்டால்  உங்கள் குடும்பம்  பெறக்கூடிய செல்வம்  ரூ 1.75 ( ரூ ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம்) . 

அதாவது உங்கள் எழுபதாவது வயதில் வெறும் ரூ 500/= சிக்கனம் படுத்தி துவங்கப்பட்ட முறையான முதலீட்டு ஆலோசகரின் ( ஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ்) வழிகாட்டும் முறையில் உங்கள் வாரிசுகளுக்கு தரக்கூடிய பரிசு , அவர்கள் கோடீஸ்வரரின் வாரிசுகள் என்ற பெருமை.  


இதே முறையில் நீங்களும் , உங்கள் குழந்தைகளும் மட்டும் ஒவ்வொருவரும் 30 ஆண்டுகள் வீதம் மொத்தம் 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்திருந்தால் கிடைக்கக்கூடிய தோராய தொகை ரூ 28 கோடி ரூபாய் . 


இரண்டே தலைமுறை ஆண்டுகளில் , வெறும் ரூ 500/= மட்டுமே சிக்கனமாய் இருப்பதன் மூலம் உங்களால் 28 கோடி சேர்க்க முடிந்தால் , அந்த ரூ 500/= ல் துவங்குவதற்கு பதிலாக , அதன் மடங்குகளில் சேமிக்க முடிந்தால் , உங்கள் செல்வ வளத்தை எண்ணிப் பாருங்கள். 


இதே சிக்கனம் மற்றும் சேமிக்கும்  (நல்ல முதலீட்டு ஆலோசகர் உதவியுடன் -ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட்ஸ்) பழக்கத்தை உருவாக்குவது நமக்கு மட்டுமல்ல , நம் வரும் தலைமுறைக்கும் நலம் பயக்கும்.


உங்கள் தனிப்பட்ட வளமான செல்வம் சேர்க்கும் வழிகாட்டி  


என்றும் உங்கள் முதலீட்டு ஆலோசகர் Sridhar Rajasekar S

Shree Investments 

94423 88779

1 comment:

Ashok kumar said...

Vaazthukkal Sir. Very interesting read. You could have also included the total. Investment done after 30 years (500*12*30) =1.8 lacs to 17.64 lacs at 12℅ in 30 yrs at 12℅.
I especially liked the below quote:
உதாரணமாக அந்தக் காலத்திலேயே பணம் கொட்டிக் கொடுக்கப்பட்டு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பல நடிகர் நடிகைள் , ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி இறந்ததும் , வாழ்ந்து வருவதும் ஒரு படிப்பினை.

முதலீட்டார்களுக்கு ஒரு வகுப்பறைப் பாடம்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வகுப்பறை பாடம்! ஒருமுறை பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, கரும்பலகையில் 9-ஆம் வ...