மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது?
தனிநபர்களோ, நிறுவனங்களோ அவர்கள் பணத்தை வைத்து, அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்து பங்குகளை வாங்குகிறார்கள், அவர்கள் முடிவு செய்யும் நேரம் விற்கிறார்கள். லாபமோ நஷ்டமோ எல்லாம் அவர்கள் பொறுப்பு.
பங்குகள், கடன் பத்திரங்கள் மட்டுமல்லாமல், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் இதுபோன்ற முறையில் முதலீடு செய்ய வாய்ப்பு தருபவை பரஸ்பர நிதிகள்.(மியூச்சுவல் ஃபண்ட்).
இவை சிறந்த முதலீட்டு ஆலோசகர்களின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மேற்கண்ட முதலீடுகளைச் செய்வது மட்டுமின்றி அவற்றின் PORTFOLIO மாற்றங்களின் மூலம் அதிக லாபம் ஈட்டி முதலீடு செய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் செயல் படுகின்றன.
முதலீட்டில் விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட தொகையை ஒரு அமைப்பிடம் கொடுத்து, நீங்கள் பங்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை எங்களுக்கு பிரித்துக்கொடுங்கள் என்று சொல்வது. அந்த அமைப்பு, அப்படிப்பட்ட முதலீடுகள் குறித்து விவரம் தெரிந்த, அனுபவம் உள்ள ஒருவரை வேலைக்கு அமர்த்தி, பலரும் கொடுத்த பணத்தை முதலீடு செய்யச் சொல்வார்கள். அவர் முதலீடு செய்வார். ஆண்டு இறுதியில் லாப நட்டக் கணக்குப் பார்த்து, லாபத்தைப் பிரித்துக்கொடுப்பார். அவருக்கு ஊதியம், போனஸ். அமைப்புக்கு லாபம்.
பரஸ்பரநிதிகள் நடத்த அரசின் அனுமதி வேண்டும். அப்படி அனுமதிபெற்று நிதிகள் நடத்தும் அமைப்புகளின் பெயர், `ஃபண்ட் ஹவுஸ்’. தற்போது
ரிலையன்ஸ் நிப்பான்,
HDFC,
ICICI புருடென்ஷியல்,
பிராங்கிள்டன் டெம்பிள்டன்
போன்ற 44 ஃபண்ட் ஹவுஸ்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு ஃபண்ட் ஹவுஸும் பல நூறு திட்டங்கள் நடத்துகின்றன.
டிசம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில், `ஃபண்டு ஹவுஸ்’கள் வசம் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இருந்தது. இவை முதலீடு செய்யப்படுவதற்காக இந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதை, `அசெட் அண்டர் மேனேஜ்மென்ட்' ( AUM) என்பார்கள்.
பங்குகளில் மட்டுமல்லாது, இப்படிப்பட்ட நிதிகள், அரசாங்க கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. பங்குகளில் முதலீடு செய்பவை, `ஈக்விட்டி ஃபண்டுகள்’. கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை, `டெப்ட் ஃபண்டுகள்’ (Debt Funds). டெப்ட் பண்டுகளை, `இன்கம் ஃபண்டு’ கள் என்றும் அழைப்பதுண்டு. பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் ஆகிய இரண்டு வகை முதலீடுகளும் ஈடுபடும் திட்டங்களுக்குப் பெயர், `ஹைபிரிட்’ Hybrid திட்டங்கள்.
பங்குகள், கடன் பத்திரங்கள் மட்டுமல்லாமல், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் இதுபோன்ற முறையில் முதலீடு செய்ய வாய்ப்பு தருபவை பரஸ்பர நிதிகள்.
ஒரே தவணையாக முதலீடு செய்யாமல், மாதாமாதம் ஒரு தொகை என்பதுபோல பலரும் பரஸ்பரநிதிகளில் முதலீடு செய்கிறார்கள். அப்படி ஒரே அளவான பணத்தைத் தொடர்ந்து முதலீட்டுக்காக பரஸ்பரநிதிகளில் போடுகிற வழிமுறைக்குப் பெயர், `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ அதை ஆங்கிலத்தில் சுருக்கமாக SIP என்றழைக்கிறார்கள்.
பெரும்பாலும் SIP ஃபண்ட் கள் நீண்ட கால முதலீடு அடிப்படையில் செய்வதன் மூலம் வங்கிகளில் சேமிப்பதை விட பல மடங்கு அதிக லாபம் பெறலாம்.
குறைந்த பட்சமாக மாதம் ரூ 500/மட்டுமே முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால முதலீடு அடிப்படையில் கோடீஸுவரராகவும் ஆக வாய்ப்பு உண்டு .
இது போன்ற முதலீடுகளில் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்க மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்களும் , டிஸ்டிரிப்யூட்ர்களும் உள்ளனர். அவர்கள் ஆலோசனைப்படி நீங்கள் சிறப்பாக முதலீடு செய்யலாம்.
தனிப்பட்ட ஆலோசனைக்கு
S. SRIDHAR RAJASEKAR
(AMFI AUTHORISED MUTUAL FUND DISTRIBUTOR)
9442388779
நன்றி :- கட்டுரை கருத்துகள் உதவி திரு சோம வள்ளியப்பன்.
No comments:
Post a Comment