Friday, March 31, 2023

"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" "பேராசை பெரும் லாபம்"

பேராசை பெரும் லாபம். 

மாற்றுவோம் எல்லோரும் சொல்லும் அந்தப் பழைய பழமொழியை. அடைவோம் நாம் பெரும் லாபத்தை‌ .

கனரா ரொபெக்கோ எமர்ஜிங் ஈக்விட்டி திட்டத்தின் SYSTEMATIC WITHDRAWAL PLAN திட்டத்தின் மூலம். இது போன்ற பல மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் அருமையான திட்டங்களை கைவசம் கொண்டுள்ளன.

இது யாருக்கு மிகவும் நன்மை தரக்கூடியது? 
இத்திட்டம் எப்படி செயல்படுகிறது? 
உண்மையான நடைமுறை உதாரணம் என்ன?  இதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். 

இன்னாருக்குத்தான் இது பயனுள்ள திட்டம் என அறுதியிட்டுக் கூற முடியாதவகையில் இத்திட்டத்தின் நற்பலன்கள் அமைந்துள்ளன. 

1. பிறக்கும் குழந்தையின் பேரில் போடப்படும் தொகை அக்குழந்தைக்கு மாதாந்திர செலவுக்கும், பின்னாளில் உயர் கல்வியில் சேர கணிசமான தொகையோடு கூடிய லாபம் அளிக்கக் கூடியது. 

2. உங்கள் அன்பு மகளுக்கு  அன்புப் பரிசாகப் போடப்படும் தொகை அவளின் மாதாந்திர செலவுக்கும், அவள் குழந்தை உங்கள் பேரக்குழந்தை வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களுக்கான கல்வி அல்லது திருமண செலவுக்கு உதவக்கூடும். 

3. வாழ்க்கையில் பணி ஓய்வு பெறுபவர்கள் , ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்து , மாதாமாதம் செலவுக்கும் ஒரு தொகை எடுத்துக் கொண்டு இறுதிக் காலங்களில் கணிசமான தொகை கையிருப்புடன் மருத்துவச் செலவுக்கோ , அல்லது பேரக்குழந்தைகளுக்கு பெருமிதத்துடன் பரிசளிக்கவோ இயலும். 

அதாவது ஒரு மொத்த தொகையை முதலீடு செய்துவிட்டு , அதிலிருந்தே மாதாமாதம் கொஞ்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டு , நீங்கள் எடுத்துச் செலவழித்த தொகைபோக மீதம் உள்ள தொகை தானாக வளர்ந்து நீங்கள் முதலீடு செய்த தொகையைவிட அதிகமாகி உங்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும் போது அதைத்தான் 
" கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை" என்று  குறிப்பிட்டேன். ஈஷா சத்குரு  ஜக்கி வாசுதேவ் அவர்கள் கூறுவது போல அத்தனைக்கும் ஆசைப்படு என்பதற்கு இது நல்ல உதாரணம். 

இப்போது உங்களுக்கு புரியும் ஏன் பேராசை பெரும் லாபம் என்று‌. 

இதை ஒரு சிறு ஆதாரத்துடன் விளக்குவோம்‌. 
இது கனரா வங்கியின் CANARA ROBECO EMERGING EQUITIES FUND மூலம் 12.03 2005 ல் ரூ 10.00 லட்சம் SYSTEMATIC WITHDRAWAL PLAN மூலம் ஒருவர் முதலீடு செய்தார்.  ஒரு ஆண்டு முடிந்த பின் அதாவது 12.03.2006 முதல் ஒவ்வொரு மாதமும் ரூ 10000/- மாத  செலவுக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்பந்தத்தில் இந்த திட்டத்தில் சேர்ந்தார். அதே போல் மாதாமாதம் ரூ 10000/- பெற்றுக்கொண்டார். 

அதாவது 204 மாதங்கள் ரூ 10000/- வீதம் எடுத்துக் கொண்டார்.  
( 204 x 10000= 2040000). 
அதாவது போட்ட 10 லட்சத்திலிருந்து அவர் திரும்ப பெற்றுக்கொண்ட தொகை ரூ 20.40 லட்சம். இது என்னடா மாயம் என நினைப்பதை விட இன்னும் பெரிய அதிசயம் இப்போது கணக்கில் மீதமுள்ள  தொகை என்ன வென்று பார்த்தால்  ரூ 48.85 லட்சம்.  
இப்போது சொல்லுங்கள் பேராசை பெரும் லாபம் தானே. 

இது எப்படி சாத்தியபானது ? சட்ட பூர்வமாக , அரசு வங்கியின் மியூச்சுவல் ஃபண்ட் எப்படி இதைத் தர முடியும்? 
அதாவது நீங்கள் செய்த முதலீடு பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கேற்ப வளர்கிறது. அதே சமயம் பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் நேரத்தில் அதன் பாதிப்பு உங்களைத் தாக்காதவாறு பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலமும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொரு துறையிலும் செய்துள்ள முதலீடுகளை சிறந்த வல்லுநர்களின் ஆலோசனைப்படி  மாற்றி அமைப்பதன் மூலமும் பாதிப்பு தவிர்க்கப் படுகிறது அல்லது குறைக்கப் படுகிறது. 

அது மட்டுமின்றி இது நீண்ட காலம் வைத்திருப்பதால் கூட்டு வட்டியின் முழுமையான பயனையும் உங்களுக்கு அளிக்கிறது. 

மேலும் விளக்கமளிக்கவும்,
மியூச்சுவல் ஃபண்டு SYSTEMATIC WITHDRAWAL PLAN ல் பெரும் லாபத்தில் நீங்களும் பங்கு கொள்ள 
நேரில்/ ஃபோன்/வாட்சப் மூலம் தொடர்பு கொள்ள 

SRIDHAR RAJASEKAR S
9442388779
7010450878

(ARN No : 262703)
AMFI REGISTERED MUTUAL FUND DISTRIBUTOR
askwealth2me@gmail.com


No comments:

முதலீட்டார்களுக்கு ஒரு வகுப்பறைப் பாடம்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வகுப்பறை பாடம்! ஒருமுறை பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, கரும்பலகையில் 9-ஆம் வ...