1. குழந்தைகளின் கல்வி
2. ஒரு கனவு வீடு
3. குடும்பத்திற்கு ஒரு அருமையான வாகனம்.
நம் வாழ்க்கையின் முதல் விருப்பம் குழந்தைகளின் கல்வி. இன்று வணிகமாகிவிட்ட சூழலில் , நம் சேமிப்பு ஒரு சிறந்த முதலீடு இன்றே செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கல்வி வணிகமாகி விட்டது
நம் இன்று செய்யும் முதலீடு, நாளைய கல்விச் செலவை ஈடுகட்டுமளவு இருந்தாக வேண்டும். உண்மையில் 6% சதவீத விலை உயர்வை , உங்கள் வங்கி டெப்பாசிட்டில் பெறும் 7% அல்லது 8% சதவீதம் தரும் வங்கி முதலீடு, வரி நீங்கலாக, நீங்கள் பெறப்போகும் தொகை அதை ஈடு கட்டுமா?
வங்கிக் கடன் அவ்வளவு எளிதா?
ஒரு வேளை சேமிக்காமலிருந்தாலும் வங்கி மூலம் கடன் பெறுவதன் மூலம் சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளீர்களா அல்லது கடன் பெறுவதும் அவ்வளவு எளிது என்று எண்ணியுள்ளீர்களா?
இனி கடன் தேவையா என்ன? ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை ஏன் நம்பிக்கையான முறையில் நீங்கள் தைரியமாக எதிர்கொள்ளக்கூடாது?
இன்றைய நிலையில் எஞ்சினீரிங் அல்லது மெடிக்கல் சீட்டுக்கு குறைந்த பட்சம் ரூ 10 லட்சம் என்று கொள்வோமானால் உங்கள் குழந்தைகளின் இன்றைய வயதைக் கணக்கில் கொண்டு எதிர்காலத் தேவை6% விலைவாசி உயர்வு என்று கணக்கிட்டால் கீழுள்ளபடி இருக்கலாம்.
எவ்வளவு செலவாகும்?
உங்கள் குழந்தை இன்னும் 5 ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்க்க வேண்டி இருந்தால், அப்போது உங்களிடம் 13.38 லட்சம் தேவைப்படும்.
10 ஆண்டுகள் கழித்து சேர்க்க வேண்டி இருந்தால் ரூ 17.90 லட்சம் தேவைப்படும்.
15 ஆண்டுகள் கழித்து சேர்க்க வேண்டி இருந்தால் ரூ 23.96 லட்சம் தேவைப்படும்.
உங்கள் குழந்தையின் வயது இப்போது 5 எனில் இன்னும் 12 ஆண்டுகள் கழித்து +2 முடிக்கும்போது கட்ட வேண்டிய தொகை ரூ 20.12 லட்சமாக இருக்கக்கூடும்.
அதாவது இன்று உங்களிடம் ரூ 5 லட்சம் இருந்து அதன் மூலம் 12% சதவீத லாபம் பெற முடியுமெனில் 12 ஆண்டுகளில் அது ரூ 19.47 லட்சமாக உங்களுக்கு கல்லூரி கட்டணத்திற்கு இது உதவக் கூடும்.
இன்று உங்களிடம் ரூ 5 லட்சம் இல்லாமல் இருந்தாலும் மாதம் ரூ 6000/- மட்டும் சேமித்தால் அதாவது அதே 12% சதவீத லாபம் பெறக்கூடிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 12 ஆண்டுகள் கழித்து உங்களிடம் ரூ 19.33 லட்சம் இருக்கக் கூடும்.
எங்கும் கடன் வாங்காமலே உங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்லூரிச் செலவை தன்னம்பிக்கையோடு எதிர் நோக்கலாம்.
இதற்கு எது சிறந்த முதலீடு?
சந்தேகமின்றி பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமே.
முந்தைய தரவுகளின்படி பல மியூச்சுவல் ஃபண்டுகள் 20% சதவீதத்தை விட அதிகமாகவே லாபம் தந்துள்ளன.
அப்படி 20% லாபம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உங்களுக்கு ரூ 35.89 லட்சம் லாபம் தரக்கூடும்.
வங்கியில் சேமிப்பது உங்களுக்கு கூட்டுவட்டி மூலம் 7 அல்லது 8 சதவீத வட்டியில் திரும்பக் கிடைக்கும்.
அதுவே மியூச்சுவல் ஃபண்டு மூலம் நீங்கள் கூட்டு வட்டியின் பயனையும் , சராசரி விலைப் ( Average Costing ) பயனையும் சேர்த்து கூடுதலாகப் பயன் பெறலாம்.
அதாவது திட்டமிட்ட தொடர் சேமிப்பு முதலீடு மூலம் உங்கள் குழந்தைகளின் கல்விக்கனவை உறுதியுடன் நீங்கள் எதிர்நோக்கலாம். இனி எதற்காகக் காத்திருக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கும் தனிப்பட ஆலோசனைக்குப் வழிகாட்டலுக்கும் எப்போதும் கீழ்க்கண்ட எண்ணிலும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீதர் ராஜசேகர்
(AMFI REGISTERED MUTUAL FUND DISTRIBUTOR)
9442388779
7010450878
askwealth2me@gmail.com
No comments:
Post a Comment